Pages

Pages

Wednesday, June 3, 2020

VELLORE, RANIPET,TIRUPATHUR பள்ளிக் கல்வி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு மையங்களில் COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள்

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.9700/ஆ5/2020 நாள் 03.06.2020

பொருள்

பள்ளிக் கல்வி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வு மையங்களில்
COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் தேர்வு
மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள்
சார்பாக.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 15.06.2020 முதல் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு
பொதுத் தேர்வு முன்னிட்டு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் தேர்வு மையங்களாக
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் 08.06.2020 முதல் பள்ளிக்கு
தொடர்ந்து வருகைபுரிய வேண்டும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் COVID-19 நோய்தடுப்பு
மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குட்பட்டு அனைத்து தேர்வு மையங்களும் மாணவர்கள் தேர்வு
எழுத ஏதுவாக

ஊராட்சி அல்லது பேரூராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு பள்ளியின் அனைத்து
தேர்வறைகள் மற்றும் பள்ளி வளாகம் முழுவதிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட
வேண்டும், பள்ளி வளாகம் மற்றும் அனைத்து தேர்வு அறைகளை சுத்தப்படுத்தி கிருமிநாசினி
Coffee Gausdintuh. (Dysinfection spraying work through Local body)
தெளித்தல் வேண்டும். (Dysinfection spraying work through Local body),
தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் போதிய மேஜை நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட
வேண்டும்,
10 மாணவர்களுக்கு ஒரு தேர்வறை வீதம் தேர்வறைகள் எண்ணிக்கை உள்ளதா என உறுதி
செய்யப்படவேண்டும்,
குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என உறுதி
செய்யப்படவேண்டும்,
ஒரு மாணவருக்கு 3 முகக்கவசம் பெறப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட நடவடிக்கை
எடுக்கப்படவேண்டும்,
தேர்வு நுழைவுச்சீட்டு மாணவர்களுக்கு வழங்க சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் விதமாக
பள்ளிகளில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா, தேர்வு கால அட்டவணை சார்ந்து
அனைத்து மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதா,
வீட்டிலிருந்து தேர்வு மையங்களுக்கு வருகை புரிய பேருந்து வசதிகள் தேவைப்படும்
மாணவர்களின் விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில்
(edwizevellore.com) பதிவிடப்பட்டுள்ளதா,
ஆகியவை குறித்து அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அனைத்து
உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






1 comment: