10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தும் பட்சத்தில் சிபிஎஸ்சி மாணவர்களுக்குப்போன்று தற்போது இருக்கும் இடத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்க மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன்
அறிக்கை.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 ந்தேதி தொடங்க இருந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரை தேர்வு நடக்குமா நடக்காதா மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழப்பம் நீடிக்கிறது.காரணம் நாளுக்குநாள் கொரோனா விஸ்வரூபமெடுத்துவருகிறது. மார்ச் மாதம் தேர்வு நடைபெற இருந்த காலகட்டத்தில் தமிழத்தில் கொரோனா தொற்று 9 பேரை மட்டுமே தொற்றியிருந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று 25 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. ஜுன் 15 ல் பொதுத்தேர்வு என்பது பொதுவாகவே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும் தொற்று பரவுவதிலிருந்து குறைக்க முடியுமே தவிர தடுப்பது இயலாது என்பது நடைமுறை உண்மை.பொதுத்தேர்வினை ரத்துசெய்ய இயலாதபட்சத்தில் தேர்வு நடத்து பட்சத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் மாணவர்களும், ஆசிரியர்களும் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா தொற்று பரவிவருகிறது. மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு வர மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.மாவட்ட எல்லையைத் தாண்டி வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றுள்ள நிலையில் மாணவர்களால் தேர்வினை எதிர்கொள்வது இயலாதகாரியம் என்பதால் தேர்வு எழுதமுடியாமல் போகுமோ அச்சத்தால் மனஅழுத்தத்தில் உள்ளார்கள். எனவே மாணவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் தேர்வெழுத அனுமதித்தும் தேர்வுபணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியகளும் தற்போது இருக்கும் மாவட்டத்திலேயே பணிபுரிவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம்.ஏற்கனவே சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்திலே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொற்றிவிடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கும் நிலையில் தேர்வு மையத்திற்கு பிள்ளைகளை அனுப்பிவைத்தால் அதன்மூலம் பரவிவிடுமா என்ற பயமும் உள்ளது. அதேவேளையில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தவேண்டிய சூழலில் அரசு கொரோனா கட்டுபாட்டிற்குள் வந்தபிறகு தேர்வு நடத்தலாம். 11 ஆம் வகுப்பு தேர்வினை பள்ளிகள் திறந்தபிறகு நடத்திக் கொள்ளலாம்.மேலும் மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு கொரோனா கட்டுபாட்டிற்குள் வந்தபிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த ஆவனசெய்யவும் தவிர்க்கமுடியாத நிலையில் தேர்வு நடத்தும்போது மாணவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்திலேயே தேர்வெழுதவும்.ஆசிரியர்கள் இருக்கும் இடத்திலே தேர்வுப்பணி பார்க்கவும் ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment