உணவின்றி 11,700 பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் தவிப்பு கருணை அடிப்படையில் உதவ தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை
தமிழ்நாடு அரசு அரசாணை 177 நியமனம் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூபாய் 5000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில்
மார்ச் 2012 ஆண்டு நியமிக்கப்பட்டார்கள். பல்வேறு காரணங்களினால் பணியிலிருந்து விலகலுக்குப்பிறகு தற்போது 11,700 பேர் மாநிலம் முழுவதும் உடற்கல்வி,ஓவியம்,இசை ஆசிரியர்களாக வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் என மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகிறார்கள் தற்போதைய சம்பள ரூ.7700 வழங்கப்பட்டுவருகிறது . மற்றநாட்களில் மாற்றுவேலை செய்து குடும்பம் நடத்திவந்தார்கள். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லைர நாளிலிலிருந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக மே மாதம் முழுவதும் வேறுபணி செய்தே குடும்பம் நடத்திவந்தார்கள். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையால் எந்தவேலையும் இல்லாமல் பகுதிநேர ஆசிரியர்கள் நெருக்கடியான சூழலில் சம்பளமின்றி தவித்துவருகிறார்கள். உணவின்றி தவிக்கும் 11700 பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் ஒருவேளை உண்பதற்கு கூட வருவாய் இன்றி தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கருணை அடிப்படையில் வழங்கவும் பணி நிரந்தரம் செய்யவும் ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
No comments:
Post a Comment