Pages

Pages

Monday, May 25, 2020

எதிர்வரும் கல்வி ஆண்டில் கற்றல்-கற்பித்தல் பணி நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மதிப்புமிகு. ஆணையாளர் அவர்களுக்கு கருத்துகள் சமர்ப்பித்தல் .





     தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் எதிர்வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள பணிகள் குறித்து கீழ்காணும் கருத்துகளை தாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

1.கொரோனா தொற்று குறையும் தன்மையைப் பொறுத்து ஜூலை 2 ல் பள்ளிகள் திறக்கலாம்.
2.வாரம்முழுவதும் பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும். அதே நேரத்தில் பாதுகாப்பு கருதி சமூக இடைவெளியும் கடைபிடித்து  பள்ளிகள் இயங்க
பகுதிநேரப் பள்ளிகள் (SHIFT SCHOOL) மாற்றியமைக்கலாம்.(பேரிடர் காலத்தில்)
3.உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை காலையும்
9 முதல் 12 ஆம் வகுப்பு வரை  மாலையும் இயங்கலாம்.( பள்ளிவேலை நேரம் தவிர்த்து ஆசிரியர்கள் இணையம் வழியாக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்.)
4.தொடக்கப்பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கை பொறுத்து பகுதிநேர பள்ளிகள் செயல்படலாம்.
 5. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பவளர்ச்சி,அரசியல், சமூகம், பொருளாதாரம் நடைமுறைகள் எல்லாம் மாறிவரும் சூழலில் . ஏதாவது பேரிடர் காலம் வந்தால் அப்போது திடிரென்று தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியினை எப்படி சீரமைப்பதில் சிக்கல். ஆகையால் தொடர் பயிற்சி முக்கியம்.
 6. ஆறாம் வகுப்பு முதல் ஒளி ஒலி காட்சி (Audio-Visual)  வகுப்புகள் நடத்தப்படவேண்டும்
இணையதளத்தினை எவ்வாறு பயன்படுத்துதல் உள்ளிட்ட தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு தன்னம்பிக்கையும் வளர்க்கும் கல்வி அமையவேண்டும்.
7. அனைத்து பள்ளிகளிலும் WIFI வசதிகளை ஏற்படுத்திடவேண்டும் SMART CLASS அமைத்திடவேண்டும்.
8. தினம் ஒரு பாடவேளை மாணவர்களாகவே சுயவழிக்கற்றல் வகுப்பு இருக்கவேண்டும்.  8.பள்ளிகளிலேயே வாரம் ஒருமுறை இணையவழித்தேர்வுகள் நடத்திடவேண்டும்.
9. ஆறாம் வகுப்பு முதல் கையடக்க கணினி வழங்கவேண்டும்.
10. பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகூட இணையம் வழி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
11. பொதுத்தேர்வில் 60 மதிப்பெண்கள் இணையவழித்தேர்வு (OMR SHEET) 30 மதிப்பெண்கள் எழுத்துத்தேர்வு,10 மதிப்பெண்கள் மதிப்பீடு
12.பெரும்பாலான நுழைவுதேர்வுகள், போட்டித்தேர்வுகள் இணையம் வழியாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. தொடர் பயிற்சிதான்  தன்னம்பிக் கையோடு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள எளிதாக முடியும்.
தனியார் பள்ளிக்கு இணையாக அரசுபள்ளிகளும் கருதபடும்.அரசுபள்ளி மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றிப்பெற முடியாமல் போவது இணையபயிற்சி இல்லாததும் காரணமே.(நேரநிருவாகம் அச்சம்)
13. மாநிலம் முழுவதும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை உடனடியாக தொடங்கவேண்டும்
14.கற்றல்-கற்பித்தல் பணி தடையில்லாமல் நடைபெற அத்தியவாசியப் பணிகள் தவிர (தேர்தல் பணி) மற்ற பணிகள் வழங்குவதை தவிர்க்கவும்.
15.மாணவர்களுக்கு முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதியினை உறுதி செய்வதுடன் பள்ளிகளில் சுகாதாரவசதியினை மேம்படுத்திடவேண்டும்.
16.ஆசிரியர்கள் மனஉளைச்சலின்றி பணிபுரிய இடமாறுதல் கலந்தாய்வு நடத்திடவேண்டும்
17. RTE ட்டத்தின்படி 25% மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அரசு தேர்வு செய்து தருவதை தவிர்க்கவும்.மாறாக சரியானமுறையில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்களா என்பதை அரசு கண்காணிக்கவேண்டும்.
18.இணையவழியில் பாடம் நடத்திட அரசே புதிய செயலியை உருவாக்கலாம். ( tnschl App)
 மேற்கண்ட 18. வகையான கருத்துகளை தங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்.தாங்கள் பரிசீலித்து செயல்படுத்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம்.
பி.கே.இளமாறன் M.A.,B.Ed.,
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment