Pages

Pages

Friday, April 10, 2020

4000 தொடக்கப்பள்ளிகள் மூடநடவடிக்கை- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.






4000 தொடக்கப்பள்ளிகள் மூடநடவடிக்கை- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
          கொரோனா பரவல் தடுப்பு நடவடிக் ஒருபுறம் போர்க்கால அடிப்படையில் நடந்துவரும் நிலையில் மறுபுறத்தில் ,கடந்த 3,4 நாட்களாக 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரின் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பெறுவதாகவும, அதன் மூலம் 25 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை மூடி அருகிலுள்ள பள்ளியுடன் இணைத்திட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறியப்படுகிறது.
அந்த நடவடிக்கை உண்மை எனில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள காலத்தின் இந்த நடவடிக்கை வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகிவிடும்.  கிராமப்புற ஒடுக்கப் பட்ட விவசாய மக்கள் நடுத்தர மக்களின் நடவடிக்கையினை முற்றிலும் முடக்குவது போல் அமைந்து சுமார் 4000 தொடக்கப்பள்ளிகள்மூடப்படும் என்ற செய்தி பரப்பிவருவது அரசின் சிறப்பான நடவடிக்கை கெடுப்பதாக ஆகிவிடும்.இச் செய்தி உண்மையெனில்
 மக்களை  முடக்கிப்போடும் நடவடிக்கையாக அமைந்து  பாதிப்பு எல்லா நிலைகளிலும் உருவாகி இடைநிற்றல் அதிகரிக்கும்.
25 மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள கிராமப்புற பள்ளிகளை மூடிவிடும்  நடவடிக்கையினை நிறுத்தி விடவும் அதன் மூலம் கிராமப்புற மக்களின் கல்வி கற்கும் நிலையினை தடுக்காமல் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
    மேலும் உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா மூலம் 15 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு 90 ஆயிரம் பேர் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் இந்தியாவும் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டையும் விட்டுவைக்க வில்லை.வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் மாநில அரசு எடுத்துள்ள முறையான நடவடிக்கை மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மூலம் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் பேரிடர் காலத்தில்  ஊரடங்கு உத்தரவின் மூலம் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் 10 க்கு 10 இடமே உள்ள வீட்டில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் குடும்பங்களையும்  கருத்தில் கொண்டு படிப்பதற்கு சூழலே இல்லாத நிலையில் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என்பது மன உளைச்சைலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. உயிரா,படிப்பா என்ற காலகட்டத்தில் உள்ளதால் பெரும்பாலான பெற்றோர்களின் வேண்டுகோளை கருத்தில்கொண்டும் மாணவர்களின் நலன்கருதியும் 10 ஆம் வகுப்புப்பொதுத் தேர்வினை ரத்துசெய்து அனைவருக்கும் தேர்ச்சிவழங்க ஆவனசெய்யுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment