Pages

Pages

Wednesday, April 1, 2020

மதிப்புமிகு. கல்வி அலுவலர் அவர்கள் கல்வித்துறை பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 1500 பேர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் என்ற அறிக்கை வரவேற்புக்குரியது. பேரிடர்காலங்களில் ஆசிரியர்கள் தானாக முன்வந்து சேவைபுரிந்துவருகிறார்கள் என்றால் அதுமிகையாகாது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அசாதாரணச் சூழலில் ஆசிரியர்களை பயன்படுத்துவதில் தவறில்லை.ஆனால் உதவிகல்வி அலுவலர்கள் தலைமையாசிரியர்கள் மூலமாக ஆசிரியர்களின் பெயர்களை கட்டாயப்படுத்தி வாங்கிவருவது வருத்தத்திற்குரியதாகவும் மனஉளைச்சலையும் உண்டாக்கியுள்ளது. அதேவேளையில் ஆசிரியர்களின் உடல்நிலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 வயதிற்கு மேற்பட்டோர் சர்க்கரை,ரத்தஅழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரும்மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலஆசிரியர்கள் தங்களின் பாதுகாப்புக்கருதி சொந்தஊருக்கு சென்றுள்ளவர்களையும் கட்டாயப்படுத்தி இப்பணியில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம். மேலும், உடல்நிலைப் பாதிக்கப்பட்டோரை பயன்படுத்துவதுடன் நோய் தொற்று விரைந்துபரவும் நிலை உண்டாகும். எனவே, ஈடுபாட்டுடன் தன்னார்வத்தோடு முன்வந்து செயல்படும் ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு என்றென்றும் துணைநிற்கும். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.





மதிப்புமிகு. கல்வி அலுவலர் அவர்கள்
கல்வித்துறை
பெருநகர சென்னை மாநகராட்சி
 கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 1500 பேர்களை கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் என்ற அறிக்கை வரவேற்புக்குரியது. பேரிடர்காலங்களில் ஆசிரியர்கள் தானாக முன்வந்து சேவைபுரிந்துவருகிறார்கள் என்றால் அதுமிகையாகாது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும்  அசாதாரணச் சூழலில்  ஆசிரியர்களை பயன்படுத்துவதில் தவறில்லை.ஆனால் உதவிகல்வி அலுவலர்கள்  தலைமையாசிரியர்கள் மூலமாக ஆசிரியர்களின் பெயர்களை                 கட்டாயப்படுத்தி வாங்கிவருவது வருத்தத்திற்குரியதாகவும் மனஉளைச்சலையும் உண்டாக்கியுள்ளது.
 அதேவேளையில் ஆசிரியர்களின் உடல்நிலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 வயதிற்கு மேற்பட்டோர் சர்க்கரை,ரத்தஅழுத்தம்  போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரும்மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலஆசிரியர்கள் தங்களின் பாதுகாப்புக்கருதி சொந்தஊருக்கு சென்றுள்ளவர்களையும் கட்டாயப்படுத்தி  இப்பணியில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம். மேலும், உடல்நிலைப் பாதிக்கப்பட்டோரை பயன்படுத்துவதுடன் நோய் தொற்று விரைந்துபரவும் நிலை உண்டாகும். எனவே, ஈடுபாட்டுடன் தன்னார்வத்தோடு முன்வந்து செயல்படும் ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு என்றென்றும் துணைநிற்கும்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

No comments:

Post a Comment