கொரோனாவை தனிமைப்படுத்திட
சுயஊரடங்கிலும் சுயநலமின்றி பணிசெய்யும் மருத்துவர்-பணியாளர்களின் பாதங்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வணங்குகிறது.
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை
உலகை உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் பரவலைத்தடுத்திடும் வகையில் சுயஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
ஆளுங்கட்சி, எதிர்கட்சி,அரசியல் கட்சிகள்,அடக்கு முறைகள் காவல்துறை கட்டுபாடுகள், அச்சுறுத்தல்கள் சங்கங்கள் என்று ஊரடங்கு அழைப்புவிடுத்தாலும் இதுவரை ஊரடங்கு வெற்றிப் பெற்றதாக வரலாறில்லை. ஆனால் முழுமையான விழிப்புணர்வு தானே முன்வந்து சுயஊரடங்கு மாண்புமிகு பிரதமரின் வேண்டுகோளை யேற்று சுயஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இது உத்தரவால் அல்ல. பேரிடர் காலங்களில் மத்திய-மாநில அரசுகளின் சரியான அணுகுமுறையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் விழிப்புணர்வுமே சுயஊரடங்கு வெற்றி.இதன்மூலம் ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்பு இந்தியர்களின் ஒற்றுமையைக் கண்டு உலகமே வியந்துநிற்கிறது. எதையுமே அடக்குமுறையால் அல்ல. அன்பால் அவசியத்தினை மக்களிடம் எடுத்துசென்றால் போதும் என்பது கொரோனா எதிர்ப்பு சுய ஊரடங்கு நிருப்பித்திருக்கிறது.இன்னும் ஒருபடி மேலே சென்று தமிழ்நாடு முதன்மைவகிக்கிறது என்றால் அது மிகையாகாது.
இந்தியாவே வீட்டிற்குள் முடங்கி கிடந்தாலும் தங்கள்பணி மக்கள் பணியே என்று தன்னலமின்றி பணியாற்றும் மருத்துவர்- பணியாளர்களின் சேவைக்கு நன்றியுடன் பாதங்களைத் தொட்டு வணங்குவதில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பெருமைக்கொள்கிறது.மேலும், மாலை 5 மணியளவில் மருத்துவ சேவையாளர்களுடன் இப்பணிக்கு உதவுபவர்களுக்கும் கைத்தட்டி நன்றிசெலுத்துவோம்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
No comments:
Post a Comment