தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை யினை ஏற்றும் மாணவர்களின் நலன்கருதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை தள்ளிவைத்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றி. 11 மற்றும் 12 வகுப்புத்தேர்வுகளையும் மார்ச் 31 க்குப்பிறகு நடத்திட வேண்டுகோள்.
மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
கொரோனா வைரஸ் பாதிப்பின் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் தமிழக அரசினை பாராட்டுகின்றோம்.
மேலும் 9.45 மாணவர்களின் நலன்கருதி பத்தாம்வகுப்புப் பொதுத்தேர்வினை ஒத்திவைத்ததை தமிழ்நாடு ஆசிரியர் . சங்கம் வரவேற்கிறது. அதேவேளையில் கொரோனா பரவல் விஸ்வரூபத்தைத் தடுத்திட மார்ச் 31 வரை கல்வி நிறுவனங்கள் மால்கள் உள்ளிட்ட தமிழக எல்லைகளைக் கூட மூடியுள்ள நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை இரண்டையும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டுகிறேன். 200 பேருக்கு தொற்றினாலும் 2000 பேருக்கு பரவும் நிலையிலுள்ள கொடூரமான கொரோனாவை அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே தேர்வு நடந்துக்கொண்டிருக்கிறது இரண்டுத்தேர்வுகள் மட்டும்தானே என்று விட்டுவிடாமல் மாணவர்களை காப்பாற்றும் விதத்தில் 11,12 ஆம் வகுப்பின் தேர்வுகளை மார்ச் 31 க்கு பிறகு நடத்திடவேண்டும்.
மேலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்வரை அனைவரையும் தேர்வின்றி தேர்ச்சியளித்தும் ஆசிரியர்களையும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்றிட விடுப்பு வழங்க ஆவனசெய்யும்படி வேண்டுகிறேன் .மேலும் .தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் கோரிக்கையினை ஏற்றும் மாணவர்களின் நலன்கருதி 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை தள்ளிவைத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
No comments:
Post a Comment