Pages

Pages

Wednesday, May 22, 2019

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாற்ற தடையில்லை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வருத்தமளிக்கிறது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :


 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கத்தோடு அங்கன்வாடி மையங்களை பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. அதே வேளையில் முன்பருவ கல்வி கற்கபோகும் மூன்று வயது குழந்தைகளின் மனநிலையினை அறிந்து உளவியல் ரீதியாக அணுகிட 
" மாண்டிசோரி" பயிற்சிப்பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளார்கள் என்பதற்காக பணிமாற்றம் செய்வது எவ்விதத்தில் சரியாக அமையும். காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உபரி ஆசிரியர் பணியிடங்களை சமன் செய்யமுடியும். மேலும் குழந்தைகளின் உடல் நலம் மனநலம் கருத்தில்கொண்டு முன்பருவக் கல்வி யான மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சிப்பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்திடவேண்டும்.தற்போது மாண்டிசோரி பயிற்சி முடித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சும். ஒரு ஆண்டுகால பயிற்சியினை  இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத கால பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சியளித்து எடுக்க சொல்வது  முறையான பயிற்சிக்கு இணையாக அமையாது. குழந்தையினை மையப்படுத்தும் கல்வி முறையாக அமைந்திடவும் குழந்தைகளின் மன நலனை கருத்தில்கொண்டு இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றும் எண்ணத்தினை மறுபரிசீலனை செய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன். 
 பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
98845 86716

No comments:

Post a Comment