Pages

Pages

Tuesday, May 14, 2019

பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை: பள்ளிக் கல்வித் துறை அதிரடி

மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியைக் குறிப்பிட த் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
பொதுவாக தங்களது படிப்பினை முடித்த பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதில் மாணவர்களது சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியைக் குறிப்பிட தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில பள்ளிக் கல்வித் துறை செவ்வாயன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மாநில வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால் இனி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை' என்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment