கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில், வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல்நலத்தை பேணிகாப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment