Pages

Pages

Monday, May 20, 2019

எல்ஐசி-ல் 1,753 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் எல்ஐசி நிறுவனத்தில் இந்தியா முழுவதும் நிரப்பப்ப உள்ள 1,753 Apprentice Development Officer (ADO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக எல்ஐசி அலுவலத்தில் நிரப்பப்பட உள்ள 1,257 பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Apprentice Development Officer (ADO)
மொத்த காலியிடங்கள்: 1,753 இதில், தென்னக எல்ஐசி அலுவலகத்தின் காலியிடங்கள் - 1,257
தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: பயிற்சி காலம் உதவித்தொகையாக மாதம் ரூ34,503 வழங்கப்படும். பின்னர் Probationary Development Officer -ஆக நியமனம் செய்யப்பட்டு மாதம் ரூ.21,865 - 55,075 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:http://www.licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.licindia.in/Bottom-Links/Careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2019

No comments:

Post a Comment