Pages

Pages

Monday, April 10, 2023

மாணவர்கள் நலன் கருதி பத்தாம் வகுப்புக்கான ஆங்கிலத் தேர்வில் வினாத்தாளில் Q.No 4, 5, 6, மற்றும் Q.No 28 கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் மேலும் உரிய மதிப்பெண்கள் மாணவர்கள் பெறும் வகையில் விடைக்குறிப்புகளில் உரிய வழிகாட்டுதல்கள் இடம் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகோள்.

10-04-2023 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான ஆங்கிலத் தேர்வில் வினாத்தாளில் எதிர்ச்சொல் பிரிவில் (Q.No 4,5,6) உரிய தலைப்பு வழங்கவில்லை, 
வழக்கமாக 1,2,3 ஆகிய கேள்விகள் SYNONYMS (அருஞ்சொல் பொருள்) ஆகவும் 4,5,6 ஆகியவை ANTONYMS (எதிர்ச் சொல்) ஆகவும் கேட்கப்படும். ஆனால் இன்று கேட்கப்பட்ட 4,5,6 ஆகிய கேள்விகளுக்கு மேலே, ANTONYMS என்று அச்சிடப்படவில்லை. இதனால் அருஞ்சொற் பொருளை எழுத வேண்டுமா அல்லது எதிர்ச் சொல்லை எழுத வேண்டுமா என்று மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
மேலும் Q.No 28 Road Map-ல் வழி அடைக்கப்பட்டு (way blocked) உள்ளது. இதனால் விடையளிப்பதில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
மாணவர்கள் நலன் கருதி இந்தக் கேள்விகளுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் மேலும் உரிய மதிப்பெண்கள் மாணவர்கள் பெறும் வகையில் விடைக்குறிப்புகளில் உரிய வழிகாட்டுதல்கள் இடம் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment