Pages

Pages

Sunday, January 1, 2023

அகவிலைப்படி நிலுவைத் தொகை (18 மாதம்)வழங்க வேண்டும் -மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

DOWNLOAD

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் க.அருள் சங்கு ,மாநில பொதுச் செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த. ராமஜெயம் கூட்டறிக்கை; தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டும் 16 லட்சம் பேர் பயன்"பெறக் கூடிய வகையில் 1.1.2023 முதல் அகவிலைப்படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் 1. 7 .2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி 4"சதவித நிலுவையையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக வழங்க வேண்டுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே மூன்று ஆறு மாதங்களாக 18 மாதங்களாக அகவிலைப்படியை உரிய நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. கொரோனா பெரு தொற்று தாக்கம் குறைந்த நிலையில் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் நடைமுறையை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் .உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இருந்தது போலவே ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க உடனடியாக ஆணை வழங்க வேண்டுமாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment