தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில செய்தி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளே, மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்களே ,மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்களே, மாவட்ட தலைவர்களே, மாவட்ட செயலாளர்களே, மாவட்ட பொருளாளர்களே, வட்டார தலைவர்களே, வட்டார செயலாளர்களே,வட்டாரபொருளாளர்களே, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் ஆணிவேராக திகழ்கின்ற உறுப்பினர்களே மற்றும் தமிழ்நாடு தமிழ் சங்கத்தின் மாநில நிர்வாகிகளே, மாவட்ட நிர்வாகிகளே ,வட்டார நிர்வாகிகளே உங்கள் அனைவருக்கும் மாநில அமைப்பின் சார்பில் அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்வரும் 23 .12 .2022 அன்றைய தினம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ் சங்கத்தின் நிறுவனத் தலைவர் தெய்வத்திரு பி .கே. இளம் மாறன் அவர்களுடைய பிறந்த தினமாகும்.. ஆகவே அன்றைய தினத்தில் தாங்கள் தங்களால் முடிந்த நற்காரியங்களான உணவு பொட்டலம் வழங்குதல், பரிசு பொருள்களை வழங்குதல் ,போட்டிகள் நடத்துதல், இளமாறன் நன்மாறன் கவிதை தொகுப்பு போட்டி நடத்துதல், போன்றவற்றை தங்களால் இயன்ற அளவுக்கு செய்து முடித்து நிறுவனத் தலைவருக்கு பெருமை சேர்க்குமாறும் அதை அனைத்து வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் முக நூலில் பதிவிடுமாறும் மாநில அமைப்பின் சார்பாக அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். க.அருள் சங்கு, மாநில தலைவர்,வெ. சரவணன் மாநில பொது செயலாளர் ,த.ராம ஜெயம், மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் ,மாநில அமைப்பு..
No comments:
Post a Comment