Pages

Pages

Tuesday, September 27, 2022

தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுகோள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் க. அருள் சங்கு பொதுச்செயலாளர் வெ. சரவணன் மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை

              



தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் க. அருள் சங்கு பொதுச்செயலாளர் வெ. சரவணன் மாநில பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் சேவூர் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு ஆசிரியர்களின் மத்தியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிடவும் மற்றும் மாணவர்கள் வருங்காலம் சிறப்பாக அமைய மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் விதமாக ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மாவட்டம் தோறும் சிறந்த உளவியல் வல்லுநர்களைக் கொண்டு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை நன்னெறி பாடத்தினை ஒரு பாடமாக வைக்க வேண்டும் மேலும் முதல்வர் அவர்கள் மாதம் ஒருமுறை மாணவர்களுடன் காணொளி மூலமாக கலந்துரையாட வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.



No comments:

Post a Comment