பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.
மாணவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும். ஆசிரியர்களை கற்பித்தல் பணிக்கு மட்டும் பயன்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
தேர்வுக்குப்பின் பள்ளிகள் திறப்பு மற்றும் எதிர்வரும் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 13 ம் , 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 14 ம் 10 ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 3 ந் தேதியும் பொதுத்தேர்வு தேதி அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கிறேன்.
ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கும்போது மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆசிரியர்களுக்கு அதற்கேற்றார்போல் திட்டமிடல் எளிமையாக அமையும்.
பொதுத்தேர்வினை அச்சமின்றி எழுதவும் அதேநேரத்தில் அதிகமதிப்பெண்கள் எடுக்கவும் தன்னம்பிக்கையோடு பொதுத்தேர்வை எதிர்கொள்ள உதவும்.
ஆசிரியர்கள் சிரமமின்றி திட்டமிட்டு சிறுசிறு தேர்வுகள் மூலம் மாணவர்களை தயார்படுத்தவும் படிப்பதை எளிமையாக்கிடவும் ஆண்டின் தொடக்கத்திலேயே தேர்வுத் தேதி அறிவிப்பு உதவிடுகிறது.
மேலும் கற்றல்-கற்பித்தல் பணி மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் வேலைநாள்கள் முழுதும் பள்ளியில் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் மாணவர்களிடையே கல்வித்தொய்வு ஏற்பட்டது மட்டுமில்லாமல் மனஅழுத்தத்தினால் மாணவர்களிடையே தவறானச்செயல்களும் காணமுடிந்தது.
ஆகையால், ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும்.
மேலும் எமிஸ் இணையதளத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஹெல்ப் டெஸ்க் உருவாக்கவேண்டும்.
மாணவர்களின் நலன்கருதி கற்பித்தல் பணியைத்தவிர மற்ற பணிகள் பள்ளிநேரத்தில் பயிற்சிகளுக்காக ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதையும் தவிர்த்திடும்படி மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment