Pages

Pages

Wednesday, February 16, 2022

100%வாக்குபதிவை உறுதிசெய்ய 19 ந்தேதி மாநிலம் முழுதும் அரசு பொது விடுமுறை அளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்

    


100 % வாக்குபதிவை உறுதிசெய்ய 19 ந்தேதி மாநிலம் முழுதும்அரசு பொது விடுமுறை அளிக்க தமிழ்நாடு ஆசிரியர்  சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் 
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறும் இடங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் 100% வாக்குபதிவை உறுதி செய்வது ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதாகும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்கான இரண்டுகட்ட பயிற்சிகள் முடித்து தேர்தலை சிறப்பாக நடத்திமுடிக்க தயார்நிலையில் இருக்கின்றோம்.   ஆனால்   தேர்தல் நடைப்பெறவுள்ள நகர்புறங்களில் வாக்குரிமை பெற்று தேர்தல் நடைப்பெறாத பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்,அரசு ஊழியர்கள்  தங்கள் வாக்குகளை செலுத்தஇயலாத நிலை  உருவாகியுள்ளது. ஆகையால் நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் நூறு சதவீதம் பதிவாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஆகையால் நகர்புறங்களில் வாக்குரிமை பெற்று தேர்தல் நடைப்பெறாத பிற பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்கள்  தங்கள் பகுதி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவும்  ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு வழங்கும் வகையில் தேர்தல் நடைபெறும் 19.02.2022 அன்று மாநிலம்  முழுதும் பொது விடுமுறை அளிக்க ஆவனசெய்யும்படி   மதிப்புமிகு மாநில தேர்தல் ஆணையர் அவர்களுக்கு  தமிழ்நாடு ஆசிரியர்  சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
 *பி.கே.இளமாறன்* 
 மாநில தலைவர்  
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment