பள்ளிகள்தான் பாதுகாப்பு. வகுப்பு 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.பொதுத்தேர்வைக் கருத்தில்கொண்டு தேர்தல் பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணி முடக்கத்தில் இருந்ததை மீட்டு தான் நேரடி வகுப்புகள் மூலம் இரண்டு மாதங்களில் ஓரளவுக்கு பழையநிலையினை கொண்டுவந்தோம். .. இந்நிலையில் மீண்டும் கொரோனா மிரட்டிவந்ததால்.இந்நிலையில் நேரடி வகுப்புகள் ரத்து என்பது பேரிடையாக அமைந்தது. கல்வித்தொலைகாட்சி - இணையவழி கல்வியென்பது ஒருவழிப்பயிற்சியாகவே இருந்துவருவதால் முழுமையாகப் பயன்தராது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தொடக்கக்கல்வி மாணவர்கள் எழுத்துகளே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. உயர்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துள்ளதை அறியமுடிகின்றது. எனவே முற்றிலுமாக கொரோனா தொற்று குறையாதிருந்தாலும் மாணவர்களுக்கு பள்ளிகள்தான் பாதுகாப்பு என்பதையறிந்து 1முதல் 12 ஆம் வகுப்புகள் வரை நேரிடை வகுப்புகள் மூலம் பள்ளிகள் இயங்குவதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு .முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். .மாணவர்கள் நெடுங்காலம் கற்றல் தொடர்பில்லாமல் இருந்துவருவதால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர், சோப்பு உள்ளிட்டவைகளுடன் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்துமாத்திரைகள் வழங்கிடவேண்டும். மேலும், பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் முழுமையாகக் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வழிகாட்டவேண்டிய அவசியம் உள்ளது.இந்நிலையில் பிப்ரவரி 19 ல் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான பணி தொடங்கியுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக உள்ளது.மேலும் குறிப்பாக தேர்தலுக்கானப் பயிற்சி வகுப்புகள் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ஒரு மாத காலம் தேர்தல் பணியாற்ற உள்ளோம்.இந்த நெருக்கடியானச் சூழலில் மாணவர்களை தயார்படுத்தவேண்டியுள்ளதால் மாணவர்களின் நலன்கருதி 10,11,12 ஆம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment