Pages

Pages

Tuesday, December 7, 2021

தொடக்கக்கல்வித்துறையில் பணிமூப்பு பட்டியலில் சான்றிதழ் தேர்ச்சிப்பெற்ற நாளையே பதவி உயர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 




தொடக்கக்கல்வித்துறையில் பணிமூப்பு பட்டியலில் சான்றிதழ்  தேர்ச்சிப்பெற்ற நாளையே பதவி உயர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

மாநிலத்தலைவர்

 *பி.கே.இளமாறன்*

அறிக்கை. 

    தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படும் போது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியினை மையநாளாகவைத்து  பட்டியல் தயார்செய்வது நடைமுறை.. அதற்கு  பதவி உயர்வுபெற தகுதி நிர்ணயம் அந்தந்த பதவிக்கு ஏற்ப தன்மைபாடம் மற்றும் கல்வியியல் பட்டபடிப்பில் தேர்ச்சியும் டிசம்பர் 31 க்குள் முடித்திருக்கும்வேண்டும் என்பது வரையறை. பணிபதிவேட்டில் எந்த தேதியிலும் பதிந்திருக்கலாம். இதனையே பள்ளிக்கல்வித்துறை பின்பற்றப்பட்டு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் தொடக்கக்கல்வித்துறை நடைமுறையில் இல்லாத ஒன்றை கடைபிடித்துவருவதால் ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி தகுதியிருந்தும் பணிபதிவேட்டில் தேர்ச்சி சான்றிதழ் டிசம்பர் 31 க்குள் பதிவுசெய்யாதவர்களு பணிமூப்பு பட்டியலில்  பெயர் சேர்ப்பதில்லை. பல்கலைக்கழகம் தேர்ச்சி முடிவு அறிவித்தும் உரிய சான்றிதழ்  காலதாமதமாகதான் கிடைக்கும்.இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையும் தேர்ச்சி முடிவு வெளியான நாளையே பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே பணிபதிவு நாளை கணக்கில் கொள்ளாமல் தேர்ச்சிப்பெற்றநாளையே பதவி உயர்வுக்கு எடுத்துக்கொண்டு பணிமூப்பு பட்டியல்  தொடக்கக்கல்வித்துறையும் அதே நடைமுறை பின்பற்றி தயார் செய்ய ஆவனசெய்யும்படி மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன் .

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716.

No comments:

Post a Comment