வரலாற்று சிறப்புமிக்க அரசாணை
போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயம்
அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்
அறிக்கை.
கடந்த ஐந்தாண்டுகளில் வடமாநிலத்தோர் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகமானோர் ஆக்கிரமித்ததால் லட்சக்கணக்காணோர் படித்த தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு பணி கனவாகிப்போனது.
தற்போது அரசாணை 133 ன்படி போட்டித்தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்து. குறிப்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தும் தேர்வாணையத்தில் நிலை1,2,2A போட்டித்தேர்வுகளில் தமிழ் தேர்வில் 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற முதன்மைத்தாள்கள் திருத்தப்படும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றப்போகும் இனிப்புசெய்தி. இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசாணையினால் எதிர்காலத்தில் அரசுப்பள்ளிகளின் கெளரவம் உயரும்.மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் . மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment