Pages

Pages

Wednesday, November 10, 2021

பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் வழக்கு WP No.24034/2021 இன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் அட்மிஷனுக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அம்மையார் அவர்கள் ஆஜரானார். சுகாதார பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இரு வாரங்களுக்குள் ஊரக வளர்ச்சி துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப/ நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சுகாதார பணியாளர்களுக்கு ஏறக்குறைய கடந்த இரு ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவையை உடன் வழங்க கோரியும், கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள தொகுப்பு ஊதியத்தை உயர்த்தக் கோரியும் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், பாலகுட்டப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பகுதிநேர சுகாதாரப் பணியாளர் கவிதா, மேட்டூர் வட்டம் மாதையன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பகுதிநேர சுகாதாரப் பணியாளராக பணியாற்றும் இந்திராணி மற்றும் தலைவாசல் வட்டம், தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர சுகாதார பணியாளராக பணியாற்றும் ராணி ஆகியோர் பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் சார்பாக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் வழக்கு WP No.24034/2021 நேற்று 10.11.2021 இல்  மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்பமை நீதியரசர் பார்த்திபன் அவர்கள் முன்னிலையில் அட்மிஷனுக்கு வந்தது.  மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம்  அவர்கள் ஆஜரானார். சுகாதார பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இரு வாரங்களுக்குள் ஊரக வளர்ச்சி துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு 22.11.2021 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment