தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்.
நாளை முதல் துவங்க உள்ள மூன்றாம் கட்ட ICT பயிற்சியில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த சில பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இப்பயிற்சியானது துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி
பள்ளிக்கு வரும் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பாதிக்கப்படும் என்பதால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சார்ந்த பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் எவரும் பயிற்சியில் பங்கேற்க கூடாது என தெரிவிக்கலாகிறது.
எனவே தலைமையாசிரியர்கள் தவறுதலாக பதிவு செய்த ஆசிரியர்களுக்கு இத்தகவலை பகிர்ந்து அவர்களை பயிற்சியில் எக்காரணம் கொண்டும் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment