Pages

Pages

Friday, August 13, 2021

மாநிலத்திற்கு தனி கல்வி கொள்கை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு. மாநிலத்தலைவர் *பி.கே.இளமாறன்* அறிக்கை.





 மாநிலத்திற்கு தனி கல்வி கொள்கை

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.

மாநிலத்தலைவர் *பி.கே.இளமாறன்* அறிக்கை.

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்திவந்த தமிழ்நாட்டிற்கென்று தனி கல்விக்கொள்கை என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சியோடு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வாழ்த்தி வரவேற்கின்றது.இனி கல்வியில் தமிழ்நாடு தன்னிறைவு அடையும். மேலும் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு

*மலைப்பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும், 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்*


*பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை*


*அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித்திறன்களை இளம் வயதிலேயே உறுதி செய்ய ரூ.114.18 கோடி ஒதுக்கீடு*


*865 உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்*


*இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும்*


*25 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.10கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்* உள்ளிட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வைத்த கோரிக்கைகளை மாண்புமிகு முதல்வர் நிறைவேற்றியிருப்பதற்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.விலைவாசி உயர்வு-பொருளாதாரம் புள்ளியியல்  அடிப்படையில்  6 மாதத்திற்கு ஒருமுறைஅகவிலைப்படி உயரும். மத்தியஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டபிறகு மாநிலஅரசும் உயர்த்தும்.தற்போது நிதிநிலை நெருக்கடியினை கருத்தில்கொண்டு அகவிலைப்படி அடுத்த ஆண்டு வழங்கப்படும் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதொடு நிதிநிலைமை சரியானபிறகு அகவிலைப்படி 11 சதவீதம் நிலுவைத்தொகையோடு சேர்த்து வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். 

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

No comments:

Post a Comment