Pages

Pages

Friday, July 23, 2021

இரண்டரை லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஊழியர்களின் வயதுவரம்பு 58 ஆக குறைப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 







இரண்டரை லட்சம்  காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஊழியர்களின் வயதுவரம்பு 58 ஆக குறைப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவ ர்பி.கே.இளமாறன் அறிக்கை.

     தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றப்  பிறகு  பல்வேறு நடவடிக்கை மூலம் சிறப்பான ஆட்சி நடத்திவரும் மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். . மேலும் ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்கள் கூட முடியாதநிலையில் நாடுபோற்றும் சிறப்பான ஆட்சியினைப் பொறுக்கமுடியாமல்  அவபெயரை ஏற்படுத்தும் வகையில்  தொடர்ந்து பல்வேறு வதந்திகளை திட்டமிட்டு  பரப்பி வருகின்றார்கள். தற்போது பத்திரிகை ஊடகம் சமூகவலைத்தளங்களில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வயது 58 ஆகக் குறைக்கப்படும்.அதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று பரப்பி வருகிறார்கள். ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே அரசுத்துறையில் காலியாகவுள்ள 2.50 லட்சம் பணியிடங்கள் நிரப்ப முயற்சிகள் மேற்கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்.இதனை திசைதிருப்பும் வகையில் 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் 59 வயது முடிந்து 60 வயதினை தொட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்களின் வயது 58 ஆகக் குறைக்கப்படுமென்று சாத்தியமில்லா ஒரு கருத்தினைப் பரப்பப்பட்டுவருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதுமட்டுமின்றி ஓய்வூதியப்பலன் உறுதிபத்திரமாக வழங்கப்படும் என்றும் வதந்தியைப்பரப்பி வருவதால் திருமணம் ஏற்பாடு செய்தவர்கள் வீட்டுகடன் பெற்றிருப்போர் மத்தியில்  பெரும் மனஉளைச்சல் ஏற்படுத்தியிருக்கிறது. ஆசிரியர்- அரசு ஊழியர்களுக்கு எப்போதும் அரணாக விளங்கும்  அரசு இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்பொருட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

 *பி.கே.இளமாறன்* 

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716.

No comments:

Post a Comment