Pages

Pages

Thursday, July 1, 2021

பள்ளிக்கல்வி -22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டமை தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல் தமிழ்நாடுபள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 DOY 




DOWNLOAD

தமிழ்நாடுபள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை6 

..எண்.028761/93/இ1/2021, நாள் டி.06.2021 

பொருள் : பள்ளிக்கல்வி -22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் ணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டமை தொடர் நடவடிக்கை மேற்கொள்ளல்-தொடர்பாக.

பார்வை :

1) அரசாணை (நிலை) எண்.9,பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை, நாள் 2.2.2021

2) சென்னை -6, பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..எண்.0018/01/இ1/2021, நாள்.10.02.2021

22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும், தண்டனை வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்தும் அரசாணை(நிலை) எண் 9, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை நாள் 02.02.2021 வெளியிடப்பட்டது

II 

மேற்கண்ட 1 அரசாணை தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பார்வை (2)ன்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


சார்ந்த அரசாணையின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும், ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்தும் ஆணை வழங்கிய விவரங்கள் கோரப்பட்ட போது ஒருசில மாவட்டங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது. அதன் காரணமாக அரசாணையினை செயலாக்கம் செய்யும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது


தமிழ்நாடுகுடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(a) மற்றும் விதி 17 (b) ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிலுவையில் இருப்பின் அவற்றை கைவிட்டு உரிய ஆணைகள் வழங்கப்பட வேண்டும்

மேற்காணுமாறு ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை ஏதும் வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்து ஆணை வழங்கப்பட வேண்டும்

தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பின் அதனை விலக்கிக் கொண்டு மீளப் பணியமர்த்தப்பட்டவர்கள் சார்பாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட நாள்கள் அடிப்படை விதிகள் விதி 54 (B) ன்படி பணிக்காலமாக முறைப்படுத்தப்பட வேண்டும்

மேற்காணுமாறு ஆணைகள் வழங்கப்பட்ட பின்னர் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்யப்பட வேண்டும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஆணையருக்காக 

பெறுநர் 


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

நகல் 

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் 


No comments:

Post a Comment