ஆணை :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா பெருந்தொற்று ஓரளவிற்கு கட்டுட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாடாக்கர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 2020-21ஆம் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் மட்டுமே கல்வி பயின்று வந்த நிலையில், அதனால் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
2. மேற்காண் நிலையில், மாண் (மிகு முதலமைச்சர் அவர்கள் 25.02.2021 அன்று, சட்டமன்ற பேரவை விதி 110-ன்கீழ், கீழ்க்காணும் அறிவிப்பினை சட்டமன்ற பேரவையில் அறிவித்துள்ளார்:
“இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையினை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துக்களை பரிசீலித்து, 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும்.''
3. இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வி இயக்குநர் மேலே இரண்டாவதாம் படிக்கப்பட்ட கடிதத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்த உரிய ஆணை வழங்குமாறு அரசினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
4. மேற்காணும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, பள்ளிக் கல்வி இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை பரிசீலித்தும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசு கீழ்க்காணுமாறு ஆணையிடுகிறது:
> 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ்
செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர். - இவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொராம் வகுப்பு பயின்று வருபவர்களின் பெயர்ப்பட்டியல் (Nominal Roll), சார்ந்த பள்ளிகளிலிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில், அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன் கூடிய சான்றிதழை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
(ஆளுநரின் ஆணைப்படி)
தீரஜ் குமார் அரசு முதன்மைச் செயலாளர்
No comments:
Post a Comment