தேர்வுகள் அவசரம் – அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு – 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்பட்டியலினை (Nominal Roll) 14.06.2021 மதியம் முதல் 17.06.2021க்குள் அரசுத்தேர்வுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பெயர்பட்டியல்களை சார்ந்த பள்ளிகள் 14.06.2021 மதியம் முதல் 17.06.2021க்குள் பதிவிறக்கம் செய்து பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 -06-2021 முதல் 17-06.2021 வரை https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் இதுவே இறுதி வாய்ப்பு என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment