Pages

Pages

Sunday, June 13, 2021

14.06.21 HM AND OFFICE STAFF DUTY CEO RANIPET

 

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌
540/ஆ2/2021 நாள்‌. 06.2021

பொருள்‌ பள்ளிக்கல்வி -இராணிப்பேட்டை மாவட்டம்‌-அரசு/அரசுநிதி உதவி பெறும்பள்ளிகளில்‌
பணிபுரியும்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப்‌ பணியாளர்கள்‌ -அரசின்‌
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி 14.06.2021 முதல்‌ பள்ளிக்கு
வருகை புரிதல்‌-தொடர்பாக

பார்வை 1.அரசாணை எண்‌ .613,வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறைநாள்‌...05.06.2021
2.சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகள்‌
ந.க.எண்‌ .34462/பிடி1/இ1/2020, நாள்‌ : 08.06.2021

பார்வையில்‌ -1ல்‌ காணும்‌ அரசாணையின்படி, கொரோனா பெருந்தொற்று காரணமாக
மாணவர்‌ நலன்‌ கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வு நடத்தப்பட மாட்டாது.
என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ அறிவிக்கப்பட்டது.

அதனைத்‌ தொடர்ந்து பார்வை-2ல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ செயல்முறைகளின்‌
படி, கீழ்க்காணும்‌ பணிகளை மேற்கொள்ளும்‌ பொருட்டு அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌
(தொடக்கப்‌ பள்ளி முதல்‌ மேல்நிலைப்‌ பள்ளி வரை) பணி புரியும்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌
அலுவலகப்‌ பணியாளர்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை (50) பின்பற்றி
14.06.2021முதல்‌ பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்குதல்‌.
உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்‌ வழங்குதல்‌

மாணவர்‌ சேர்க்கை மேற்கொள்ளுதல்‌

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடபுத்தகங்கள்‌ மற்றும்‌ கற்றல்‌
கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள்‌ வழங்குதல்‌

பள்ளி வளாகம்‌ மற்றும்‌ வகுப்பறைகள்‌ சுத்தம்‌ செய்தல்‌

உ... மாணவர்கள்‌ கல்வி தொலைக்காட்சி கற்றல்‌ சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிடுதல்‌

ஒம்‌/- இரா.மதன்குமார்‌

முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌
இராணிப்பேட்டை
பெறுநர்‌
அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, இராணிப்பேட்டை மாவட்டம்‌, தொடர்‌ நடவடிக்கையின்‌
பொருட்டு

அரசு/அரசு உதவி பெறும்‌ உயர்‌/மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌, இராணிப்பேட்டை
மாவட்டம்‌.

அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, இராணிப்பேட்டை மாவட்டம்‌ , தொடர்‌ நடவடிக்கையின்‌
பொருட்டு.

No comments:

Post a Comment