Pages

Pages

Saturday, June 26, 2021

12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை அறிவிப்பு



DOWNLOAD PRESS RELEASE

  [Press Release No : 328 ] Statement of the Honble Chief Minister on assessment of marks for 12th Standard students


 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு ( 20 ) மற்றும் அக மதிப்பீட்டில் ( 10 ) என மொத்தம் 30- க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 


செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் ( 10 ) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு ( Extrapolated to 30 Marks ) முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 


கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 


11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ , அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு , 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் •


11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு , அக மதிப்பீடு , செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அக மதிப்பீடு , செய்முறைத் தேர்வு ஆகிய 3 தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் .


 ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணை 3/3 வெளியிடப்படும் 


 இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும் 


 தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன் மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும் இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்

No comments:

Post a Comment