Pages

Pages

Tuesday, June 1, 2021

சி.பி.எஸ்.சி +2 தேர்வுகள் ரத்து.மாணவர்களின் நலன்கருதி தமிழகத்திலும் 12 ஆம் வகுப்புத்தேர்வினை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை

 





சி.பி.எஸ்.சி +2 தேர்வுகள் ரத்து.மாணவர்களின் நலன்கருதி தமிழகத்திலும் 12 ஆம் வகுப்புத்தேர்வினை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  பல உயிர்களை பலிவாங்கியதோடு இன்னும் நம்மை  மிரட்டி கோரத்தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. 

      கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகமுதல்வரின் செயல்பாடுகள் நாடே போற்றும் வகையில் அமைந்துள்ளது. அதேநேரத்தில் நாமும் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

    தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயித்துக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதிச்செய்யபட்ட நிலையில் அரசின் துரிதநடவடிக்கையால் படி படியாக குறைந்து சற்று ஆறுதல் அளிக்கிறது. இந்நீலையில் 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் தேர்வுவைத்தால் பாதிப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.ஆகையால் சிபிஎஸ்சினைத் தமிழ்நாட்டிலும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தஆண்டு மட்டும் தேர்வினை ரத்துசெய்யப் பரிசீலனை செய்யவேண்டும்

     12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் உயர்கல்வி படிப்பினை தேர்வுசெய்யும் நிலை உள்ளது.

   தற்போது மாணவர்களின் படிப்பா உயிரா என்றால் உயிர்தான் முக்கியம்

  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்..

எனவே 12 ம் வகுப்புக்கு ஏற்கனவே  செய்முறை தேர்வுகள்  4 திருப்புதல் தேர்வுகளும் நடந்துமுடிந்நுள்ளதால் அதனடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடுவதற்கு ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

No comments:

Post a Comment