Pages

Pages

Wednesday, June 9, 2021

11 ஆம்வகுப்பு பாடப்பிரிவில் கூடுதலாக 15 % மாணவர் சேர்க்கை அனுமதியால் அரசுப்பள்ளியில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும் பாலிடெக்னிக் சேர்க்கையும் தொடங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை


 11 ஆம்வகுப்பு பாடப்பிரிவில் கூடுதலாக 15 % மாணவர் சேர்க்கை அனுமதியால் அரசுப்பள்ளியில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும்  பாலிடெக்னிக் சேர்க்கையும் தொடங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

    கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக் காரணமாகப் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

    தற்போது ஜுன் மூன்றாவது வாரத்தில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கானச் செயல்முறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டிருப்பது வரவேற்புக்குரியது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தை கருத்தில்கொண்டு மாணவர்கள் விரும்பியப் பாடபிரிவினை வழங்கிடவும் அதற்காகக் கூடுதலாக 15 சதவீதம் பாடப்பிரிவில் அதிகரித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன்மூலம் அரசு-அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்கௌகை எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும் ஒரே பாடப்பிரிவினை அதிகமாணவர்கள் கேட்கும் பட்சத்தில் விரும்பும் பாடத்தில் ஏற்கனவே படித்த கீழ்நிலைவகுப்பிலிருந்து 50 சிறு வினாக்கள் கொண்டத்தேர்வு செய்ய வழிவகுத்திருப்பது சிறப்பு. மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றமாணவர்கள் டிப்ளமா படிப்புகளில் சேருவதற்கேற்ப தொழில்நுட்பக்கல்வி யான பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கையினை தொடங்கவும் மாணவர்களின் நலன்கருதி   ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.

 *பி.கே.இளமாறன்* 

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

No comments:

Post a Comment