தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வைத்தக் கோரிக்கையினை ஏற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தவர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்படும் என்று அறிவித்தத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் ஆசிரியர்களுக்கு தேர்தல்பணி வழங்கும்போது 10 கிலோமீட்டருக்குள் பணிவழங்கிடவும், வாக்குப்பதிவின் முன்தினம் நண்பகல் 12 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் வரை தொடர்பணியின் போதும் பயிற்சிவகுப்புகள் போதும் தேர்தல் ஆணையமே உணவு வழங்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment