Pages

Pages

Tuesday, March 9, 2021

மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை





மாணவர்கள் நலன்கருதி தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை 

      கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடைபயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.   இந்நிலையில்  பொதுத்தேர்வு அறிவிப்பு வந்தால்  எப்படி எதிர்நோக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும்குழப்பத்தில் இருந்தார்கள்.

     மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு உடலும் உள்ளத்தினையும் ஒருசேர ஆய்வுசெய்து  பாதுகாப்பினை உறுதிசெய்து  9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி  என்ற அறிவிப்பினை தமிழகஅரசு அறிவித்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இருப்பினும் மாணவர்களின் கற்றல் தடையில்லாமல் நடைபெறும்வகையில் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சில மாவட்டங்களில் பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப் பட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் தமிழக சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆசிரியர்கள் வரும்வாரத்திலிருந்து தேர்தல்பணி பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவுள்ளக் காரணத்தினாலும் கொரோனா பரவலிருந்து மாணவர்களை முழுமையாக பரிசோதித்து பாதுகாக்க  ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வாய்ப்பில்லாதக் காரணத்தினால் பொதுத்தேர்வை எழுதவுள்ள 12 ஆம் வகுப்பைத் தவிர்த்து ஏற்னவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் தடுக்க பாதுகாப்புக்கருதி  விடுமுறையளிக்க ஆவனசெய்யும்படி பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.

 *பி.கே.இளமாறன்* 

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

98845 86716

2 comments:

  1. Sir private studentukkum pass poda sollunga ayya

    ReplyDelete
    Replies
    1. Elamaran sir kandippa avangalukkum ethavathu Vali sollanum sir

      Delete