Pages

Pages

Wednesday, February 10, 2021

கேந்திரியவித்யா பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தினை உறுதிசெய்ய மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 



கேந்திரியவித்யா பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தினை உறுதிசெய்ய மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

    தமிழ்நாட்டில் செயல்படும் 49 கேந்திரியவித்யா பள்ளிகளில் தமிழ்மொழி புறகணிக்கப்படுவது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    நாடு முழுதும் சுமார் 1200 கேந்திரியவித்யா பள்ளிகள் செயல்பட்டுவருகிறது.இதில் தமிழ்நாட்டில் 49 பள்ளிகள் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. மத்தியஅரசு நடத்தும் பள்ளிகளாக இருந்தாலும் அந்தந்த மாநிலமொழிகளுக்கு  முக்கியத்துவம் அளிக்கபடவேண்டும். தற்போது பேச்சுமொழியிலும் எழுத்துமொழியிலும் அதிக பயன்பாடு இல்லாமலிருக்கும் சமஸ்கிருதமொழி மொழியினை மாநிலங்களுக்குள்  முக்கியத்துவம் அளிப்பதுபோன்று ஏன் மற்றமொழிகளுக்கு வழங்கபடவில்லை. குறிப்பாக தமிழ் மொழி தமிழ் நாட்டிலேயே புறகணிக்கப்படுவது வேதனையளிக்கின்றது.மாநிலஉரிமையும் பறிக்கப்படுவதாகவும் உள்ளது. 

     கேந்திரியவித்யா பள்ளிகள் விதிகளின்படி துணை ஆணையரின் அனுமதிபெற்று 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை தமிழுக்கு மூன்று பாடவேளைகள் ஒதுக்கலாம் என்று இருந்தும் செயல்படுத்தாதது வருத்தத்திற்குரியது. உடனடியாக தமிழ்மொழி வகுப்புகளை தொடங்கிடவும் அதற்கான தமிழ்மொழி ஆசிரியர்களை நியமித்திடவும் மாண்புமிகு.முதல்வர் அவர்கள் ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 

98845 86716

No comments:

Post a Comment