Pages

Pages

Wednesday, February 24, 2021

9,10,11 வகுப்பு அனைவரும் தேர்ச்சி மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி






 9,10,11 வகுப்பு அனைவரும் தேர்ச்சி மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி

      கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடைபயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.   இந்நிலையில் திடிரென்று பொதுத்தேர்வு அறிவிப்பு வந்தால்  எப்படி எதிர்நோக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும்குழப்பத்தில் இருந்தார்கள்.

     மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு உடலும் உள்ளத்தினையும் ஒருசேர ஆய்வுசெய்து  பாதுகாப்பினை உறுதிசெய்து எதையும் முன்னெடுத்து செல்வதில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது என்றால் அதுமிகையாகாது. 

    தமிழக சட்டமன்றத்தில் 110 கீழ் மாண்புமிகு.முதல்வர் அவர்கள் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி  என்ற அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்று மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்தநன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 *பி.கே.இளமாறன்* 

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

98845 86716

No comments:

Post a Comment