கொரொனா பரவல் தடுப்பு மாணவர்களின் நலன்கருதி படிக்கின்ற பள்ளியிலே தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாதிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
கொரொனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு நடைமுறைளுடன் 9 மாதங்களுக்கு பிறகு பொதுத்தேர்வை எழுதவுள்ள 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரிடை பயிற்சி அவசியம் என்பதையறிந்து தமிழகஅரசு கடந்த 19 ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுத்தேர்வு நடத்துவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தேர்வு எண் ஒதுக்குவதற்கான நடவடிக்கை மாணவர்களின் பட்டியல் ( Student Nominal Roll ) தேர்வுத்துறையால் கேட்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன்கருதி கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையால் கல்விச்செயல்பாடுகளின் பாதிப்பை அறிந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினா வங்கி புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைககள் அரசு மேற்கொண்டுவருவதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கின்றேன்.
மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் தேர்வுமையத்தில் 4 பள்ளிகளுக்கு ( அரசு,அரசுஉதவிபெறும்பள்ளி,மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் ) பல்வேறு இடங்களிலிருந்து ஒரே தேர்வுமையத்திற்கு வருவதால் தேர்வு அறைக்குள் செல்லும்போதும் தேர்வு முடிந்து வெளியே வரும்போதும் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் சிரமம் ஏற்படும்.மேலும் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டால் கூட. தேர்வுமையத்தையே ச்சூழல் உருவாகும்.அதனால் நான்கு பள்ளிகள் பாதிக்கும்.மேலும் கிராமப்புறங்களில் 7 கிலோ மீட்டரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பள்ளியிலிருந்து தேர்வுமையம் அமைந்துள்ளதால் கொரோனா காலகட்டத்தில் போக்குவரத்து சிரமங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆகையால் மாண்புமிகு.முதல்வர் அவர்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்கவும் மாணவர்களின் நலன்கருதி படிக்கின்ற பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வுமையங்களாக மாற்றியமைத்திட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment