பொதுத்தேர்வு நெருங்குவதால் குறைக்கப்பட்டப் பாடங்கள் எவைஎவையென அறிவிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
கொரொனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை சிறப்பாக மேற்கொண்டுவரும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.
மேலும். மாணவர்களின் நலனகருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று தனியர் தொலைக்காட்சிகாட்சிகளிலும் பாடங்களை ஒளிபரப்பியும் மாணவர்கள் தேர்வினை நம்பிக்கையினை ஏற்படுத்தும்வகையில் 9 ஆம் வகுப்புவரை 50% பாடத்தையும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு 35 % பாடங்கள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.
தற்போது பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் எந்தெந்தப் பாடங்கள் குறைக்கப்படும் என்பதறியாது மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.
அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் குறைக்கப்பட்ட பாடப் பகுதி விவரங்களை உடனடியாக வெளியிடவேண்டும்
குறைந்த பட்சம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காவது வெளியிடவேண்டும்.
பாடப் பகுதி இவைதான் எனச்சொல்லாததால் படிப்பில் ஆர்வம் குறையும்.பொதுத் தேர்வுக்குரிய மாணவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் பாடப் பகுதி இவைதானென்று அறிவித்திட ஆவனசெய்யும்படி மாண்புமிகு.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
No comments:
Post a Comment