Pages

Pages

Thursday, November 19, 2020

அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நனவாக்கிய தமிழகமுதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி எதிர்காலத்தில் 15 % உயர்த்தி வழங்க வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 






அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவை நனவாக்கிய தமிழகமுதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி எதிர்காலத்தில் 15 %  உயர்த்தி வழங்க வேண்டுகோள்.

மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

      மருத்துவபடிப்பில் சேர நீட் தேர்வில் அரசுபபள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது  வரலாற்று சிறப்புமிக்கமுடிவை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. சமீபகாலமாக அரசுபள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பு கானல் நீராக இருந்தது. நீட்  தேர்வால் இடம் கிடைக்காதது வேதனையளித்தது. நீட் தேர்வோ கூடாது என்பதல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தியபிறகு தேர்வு வைப்பதுதான் சமூக நீதியாகும். அதுவரை அந்தந்த மாநிலங்களே  மருத்துவசேர்க்கை நடத்த  மத்திய அரசினை வலியுறுத்தவேண்டும்

தற்போது நீட் தேர்வில்   7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார்  6 மாணவர்களே சேர்ந்த நிலை 405  அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேருவது உறுதிசெய்து

   நீட் தேர்வில் அரசுபள்ளி மாணவர்களுக்கு மட்டும்  7.5 % உள் ஒதுக்கீடு வழங்கியதால் அரசுப்பள்ளிகள் நிமிர்ந்து நிற்கிறது.அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க போட்டிப்போடும் நிலையினை உயர்த்திய  மாண்புபிகு.முதல்வர்  அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். 

     மேலும், அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி  பதினோராம் வகுப்பிலிருந்து தொடங்குவதற்கு ஆவனசெய்தும்,அரசுபள்ளி மாணவர்களுக்கு அனைத்து உயர்கல்வி ,தொழில்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் இச்சலுகை நீட்டிக்க வேண்டுகின்றோம். அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி-நிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஆவனசெய்யவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.மேலும் , நீட் தேர்வில்  அகில இந்திய ஒதுக்கீடு 15 % போன்று எதிர்காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் 15 %  உள் ஒதுக்கீடு உயர்த்தி வழங்கவும் அதில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளும் அரசுப்பள்ளிகள் என்பதால் 15 % உள் ஒதுக்கீடு செய்யும்போது அதில் 3 % உள் ஒதுக்கீடாக வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

No comments:

Post a Comment