16 ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
கொரோனா பெருந்தொற்று தொற்று நடவடிக்கையாக பள்ளி-கல்லூரிகள் மூடபட்டிருந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று தொடர் தடுப்பு நடவடிக்கையின் மூலம் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவது மகிழ்ச்சியளிக்கின்றது. கடந்த ஆறு மாதங்களாக முடங்கிப்போயிருந்தநிலையில் பள்ளிகள் திறப்பு செய்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கின்றோம்.
பொதுத்தேர்வு நெருங்கும் நெருக்கடியானச் சூழலில் மாணவர்கள் நேரிடையாக படிப்பதே சிறந்ததாக அமையும்.
அதேநேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் வகையில் ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் வீதம் பிரித்து செயல்படவேண்டும்.
9,10,11,12 ஆகிய நான்கு வகுப்புகளும் ஒரே நேரத்தில் பள்ளி நுழைவு வாயிலில் நுழைந்தால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படும்.
ஆகையால், மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரம் அரைமணி நேர இடைவெளி இருக்கும்படி (நேரம் 9, 9.30, 10, 10.30 ) என மாற்றியமைத்திட
வேண்டும்.
பள்ளிகளில் வகுப்புகள்தோறும் கிருமி நாசினி தெளித்திடவேண்டும்.
மாணவர்களுக்கு முகக்கவசம் மற்றும் பள்ளிகள்தோறும் கைகளை சுத்தம் செய்ய சோப்பு தண்ணீர் (Hand wash )
வழங்கி பெற்றோர்-மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிட ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
No comments:
Post a Comment