Pages

Pages

Monday, August 3, 2020

இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று உறுதியளித்த மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி. பொதுத்தேர்வு-நுழைவுத்தேர்வை ரத்துசெய்யவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.







இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று உறுதியளித்த மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி.
பொதுத்தேர்வு-நுழைவுத்தேர்வை ரத்துசெய்யவும்  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

       🔸 34 ஆண்டுகளுக்குபிறகு புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறித்ததற்கு உடனடி நடவடிக்கை எடுத்து இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்பதை உறுதி படுத்திய மாண்புமிகு.
முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள் கின்றோம்.
       🔸 மேலும் 3, 5, 8  வகுப்புகளுக்கு  பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்பது பிஞ்சுகளிடத்தில் நஞ்சுப் பாய்ச்சுவதாக உள்ளது.
     கிராமப்புற மாணவர்களின் பள்ளிக்கல்விக்கு முடிவு கட்டுவதை தடுத்து நிறுத்திடவேண்டும்.

     🔸 6 ஆம் வகுப்பிலே தொழில்கல்வி என்பது மீண்டும் குலகல்வி முறைக்கு வழிவகுக்கும் என்பதால் அனுமதிக்கக்கூடாது.
      🔸மேலும் ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்குபிறகு நேர்முகத்தேர்வு அவசியமற்றது. அது முறைகேடுகளை ஊக்குவிக்கும்.

    🔸 ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் கல்வி நிலைய உயர்பதவிக்கு திறமை ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்  என்பது  இனி சாதி ரீதியாக வேண்டியவர்கள் வசதிவாய்ப்புள்ளவர்கள் தான் உயர்பதவிக்கு வரமுடியும்.

    🔸அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது. ஆனால், தனியார் கல்லூரிகள் பல்கலைக்கழகத்திடம்  இணைப்பு பெற்று அவற்றின் மேற்பார்வையில் செயல்படாவிட்டால் முறைகேடுகளுக்கு வித்திடுவதாகும்.

   🔸 கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக இளங்கலை மாணவர் சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத்தேர்வு என்பது  கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களுக்கு  கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும். நீட் தேர்வு போன்ற பாதிப்பு ஏற்படும்.
கல்லூரி படிப்பும் கனவாகிப்போகும்.
   🔸 கல்வி மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவந்தால் தான் மாநில சூழலுக் கேற்ப வடிவமைக்கமுடியும். பொதுபட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வியினை மீண்டும்  கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும்
    🔸  புதியக்கல்விக் கொள்கையில் இருமொழிக்கொள்கைக்  குறித்து தமிழக அரசு உறுதியாக முடிவெடுத்தது போன்று மாணவர்களின் நலன்கருதி பாதிப்புகளை  நீக்கிடவும் ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716

No comments:

Post a Comment