Pages

Pages

Saturday, July 25, 2020

கொரோனா கொடூரத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து தேர்வு வைத்த தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுத்திடுக.தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்.




கொரோனா கொடூரத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து தேர்வு வைத்த தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுத்திடுக.தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்.
     கொரோனா எனும் உயிர்கொல்லி வைரஸ் உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மத்திய,மாநில அரசுகள் கொரோனா  விலிருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு அறிவித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவது வரவேற்புக்குரியது.
      இந்நிலையில் கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துக்கொள்ள வில்லை.படிப்புத் தொடர்வது குறித்து ஒரு  வாரத்தில் பதிலளிக்கவேண்டும் என்று வாட்சப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பெற்றோர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவருகிறார்கள்.
   மேலும்,மாதத்தேர்வுகள் நடத்துவதாகக் கூறி இன்று 25.07.2020  குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுவைத்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது.
     ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை வரவழைத்திருப்பது அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக வுள்ளது. சமூக இடைவெளியின்றி பள்ளிக்கு கட்டாயபடுத்தி வரவழைத்திருப்பது மாணவர்களுக்கு மனஅழுத்தத்தையும் பெற்றோர்களுக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது பள்ளி நிருவாகத்தின் செயல்பாடு வருத்தத்தையளிகௌகிறது.
       மத்திய,மாநில அரசுகள் பாதுகாப்பு நலன்கருதி பலநெறிமுறைகளை வகுத்து தந்தும் அதனை கடைபிடிக்காமல் ஊரடங்கு காலத்தில் அத்துமீறி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து தேர்வு நடத்திய சுஷில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளி நிருவாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் . 9884586716

No comments:

Post a Comment