Pages

Pages

Tuesday, July 14, 2020

மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் நீட் தேர்வு - அரசுபள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.





மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்
நீட் தேர்வு - அரசுபள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

      மருத்துவபடிப்பில் சேர நீட் தேர்வில் அரசுபபள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் முடிவை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. சமீபகாலமாக அரசுபள்ளி மாணவர்களுக்கு மருத்துவவடிப்பு கானல் நீராக இருந்துவருகிறது. நீட் தேர்வு வந்தபிறகு அரசுபள்ளியில் படித்த மாணவர்கள் அதிகபட்சம் நான்கு பேர் மேல் இடம் கிடைக்காதது வேதனையளிக்கிறது.    மாநில பாடத்திட்டத்தில் தேர்வுவைத்தால் அரசுபள்ளி மாணவர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என்பதில். மிகையில்லை. நீட் தேர்வோ கூடாது என்பதல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தியபிறகு தேர்வு வைப்பதுதான் சமூக நீதியாகும். அதுவரை அந்தந்த மாநிலங்களே  மருத்துவசேர்க்கை நடத்திட அனுமதிக்கவேண்டும்.தற்போது நீட் தேர்வில்   7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 250 அரசுபள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக11 மருத்துவ கல்லாரிகள் தொடங்க இருப்பது எதிர்காலத்தில் மருத்துவபடிப்பில் அரசுபள்ளி மாணவர்கள் அதிகம் இடம்பிடிப்பார்கள். அரசுபள்ளியை நோக்கி பெற்றோர்கள் படையெடுப்பார்கள். மாணவர்சேர்க்கை அதிகரிக்கும்.
   நீட் தேர்வில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்கிய மாண்புபிகு.முதல்வர்  அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
     மேலும், அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படுவது வரவேற்புக்குரியது. அப்பயிற்சி பதினோராம் வகுப்பிலிருந்து தொடங்குவதற்கு ஆவனசெய்தும்,அரசுபள்ளி மாணவர்களுக்கு அனைத்து உயர்கல்வி ,தொழில்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் இச்சலுகை நீட்டிக்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment