12 ஆம் வகுப்பு தேர்ச்சி-சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு அரசுபள்ளி மாணவர்கள் கூடுதல் தேர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
மார்ச் 2020.நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
1
2019-20 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம்,தேர்வுநேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஆகியவைகளை எதிர்கொண்டு அரசாங்கத்தின் சரியான நெறிமுறைகளோடு ஆசிரியர்கள் எடுத்துகொண்ட தனிகவனம் குறிப்பாக மாணவர்களின் ஈடுபாடு இன்று 85.94 விழுக்காடு தேர்ச்சிப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்ற கல்வியாண்டில் அரசுபள்ளி மாணவர்களின் தேர்ச்சி 84.54 ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 85.96 ஆக உயர்ந்துள்ளது கடந்த ஆண்டு மாவட்டங்கள் 90 சதவீதம் மேர் தேர்ச்சிப்பெற்றிருந்தது.இந்த ஆண்டு 10 மாவட்டங்கள் 90 % மேல் தேர்ச்சிப் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது.
அரசுபள்ளி மாணவர்களை பொறுத்தவரை தினக்கூலி வேலைசெய்பவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் வீட்டில் போதிய அடிப்படை வசதியின்றி 90 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் படிப்பதை நம்பியிருப்பார்கள்.பள்ளிநேரம் தவிர தொடர்ந்து காலை 6.30 இரவு 7.30 மணிவரை ஆசிரியர்களின் தொடர் சிறப்புபயிற்சியும் அந்த காலகட்டத்தில் சுண்டல்,வாழைப்பழம் மற்றும் சிற்றுண்டியும் வாழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும்,ஏற்கனவே கடைசித்தேர்வு எழுதாமல் போன மாணவர்களுக்கு மறுவாய்ப்பாக வரும் 27 ந்தேதி தேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதை வரவேற்பதோடு அத்தேர்வோடு தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடி தேர்வுகளையும் சேர்த்துவைக்கவும் உடனடித்தேர்வர் விண்ணப்பிக்க வசதியாக 27 ந்தேதி நடைபெறும் தேர்வினை இரண்டு வாரங்கள் ஒத்திவைக்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
No comments:
Post a Comment