Pages

Pages

Sunday, June 28, 2020

பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை மாணவர்களின் விடுமுறைகாலத்தினை பயனுள்ளதாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்




பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை
மாணவர்களின் விடுமுறைகாலத்தினை பயனுள்ளதாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


கொரோனா பெருந்தொற்று பரவல்.
கானல் நீராகும் கல்வி
அடிப்படை கல்வி மாணவர்களின் மனதிலிருந்து வெளியேறும் முன் அவர்களை ஆற்றுப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை.எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற அரசுமுன்வரவேண்டும்
 மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தொடர்ந்து வழங்கிடும்வகையில் சத்துணவிற்கு செல்விடப்படும் தொகையினை அந்தந்த மாணவர்களின் வங்கிகணக்கில் செலுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். வாழ்வாதாராம் இழந்து தவிப்பவர்கள் உணவின்றி பாடம் கற்பது உள்ளம் ஏற்றுக்கொள்ளாது.
மாறாக ஆசிரியர்களை  மாணவர்களுக்காக பயன்படுத்துவதைவிட்டுவிட்டு அவர்களுக்கு மாற்று பணி வழங்குகிறார்களே தவிர கல்வி சார்ந்த  பணிகளைப் பற்றி யோசிப்பதில்லை.இதனால் எதிர்கால சந்ததியினர் பல்வேறு சிக்கலுக்கு உள்ளாக நேரிடும். மேலும் தற்போது பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லாத நிலையில் மாணவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் கல்வி கானல் நீராகும். எனவே எப்போதும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்பிலேயே இருக்கவேண்டும். முதற்கட்டமாக 2020-21 கல்வி ஆண்டிற்கான புத்தகம் மற்றும் நோட்டுகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும். தினந்தோறும் பாடவாரியாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசி தன்னம்பிக்கை ஊட்டுவதோடு சிறுசிறு வினாக்கள்,கணக்குகள் போன்றவற்றி சொல்லி எழுதுவதன்  மூலம் எழுத்துபயிற்சி நடக்கும். இனி பேரிடர்காலம் மட்டுமல்ல எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதும் கட்டாயம். தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மடிகணினி அல்லது டேப் குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு போன் வழங்கிடவேண்டும். ஆன்லைன் மூலம் பயிற்சி தொடங்கலாம்.
ஆன்லைன் பயிற்சியினை காலை மாலை தலா ஒரு மணி பயிறௌசி வழங்கவேண்டும். ஆன்லைன் பயிற்சியினை பயமின்றி பாதுகாப்பாக  கற்க வசதியாக அரசே புதுச்செயலினை உருவாக்கி நெறிமுறை வகுத்து முறைபடுத்தவேண்டும்.
பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை
மாணவர்களின் விடுமுறைகாலத்தினை பயனுள்ளதாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும்.17.மார்ச் 2020 முதல் புத்தகத்தையே மறந்து படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.நான்கு மாதங்கள் கல்விச்செயல்பாடுகள் தொடர்பாக எவ்விதத் தொடர்பும் இல்லாததால் எழுத்துகள் மறந்துபோகும் நிலையுள்ளது. மாணவர்கள் எழுதுவதையே மறந்துபோனால் கல்வி மீது உள்ள ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோகுமோ என்ற அச்சம் மாணவர்களுக்குமின்றி பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆட்கொல்லி நோயான பெருந்தொற்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வெறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவது பாராட்டுக்குறியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்-ஊழியர்கள் அவர்களுக்கான பணிகளை செய்துவருகிறார்கள். ஏன் கல்வித்துறையில் கூட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,மாவட்டக்கல்வி அலுவலர்கள்,உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோர்கள் அரசு கேட்கும் அனைத்து தகவல்களையும் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மூலம் வேலைவாங்கிக்கொண்டு துறைசார்ந்தபணி நடந்துவருகிறது.ஆனால் நான்கு மாதங்களாக கல்விசார்ந்த எவ்வித பயிற்சியும் இல்லாமல்   மாணவர்கள் நிலையோ பரிதாமாக உள்ளது. மாணவர்களின் கல்வி கானல் நீராக மாறாமல் தடுத்திட அரசு உடனடி நடவடிக்கை எடுத்திடவேண்டும்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment