10 ஆம் வகுப்பு தேர்வினை ரத்துசெய்தது போன்று தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேர்வு ரத்துசெய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெருமகிழ்ச்சியளித்தது.ஆனால் தனித்தேர்வர்களை பற்றி எவ்விதமான அறிவிப்பும் இல்லாததால் தனித்தேர்வு மாணவர்கள் மனஉளைச்சலில் உள்ளார்கள். கொரோனா தொற்று பரவாமல் தடுத்து மக்களை காப்பாற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவது சிறப்புக்குரியது.அரசின் செயல்பாடுகளை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.இருப்பினும் கொரோனா தொற்று மின்னைல் வேகத்தில் பரவிவருவது வேதனையளிக்கிறது.இந்நிலையில் தனித்தேர்வர்கள் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தோடு தேர்வு நடந்தால் கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன்கருதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்துசெய்து அனைவருக்கும் தேர்ச்சியளித்ததுபோல் தற்போது நாளுக்குநாள் கொரோனா கோரத்தாண்டவம் விஸ்வரூபம் எடுத்துவருவதால் தேர்வுநடத்தும் சூழல்இல்லாததாலும் விடுபட்ட 10 ஆம் வகுப்பு தனிதேர்வர்கள் அனைவருக்கும் தேர்ச்சிவழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment