Pages

Pages

Saturday, June 13, 2020

10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு செய்வதில் கிரெடு முறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.







10 ஆம் வகுப்பு
 மதிப்பெண் கணக்கீடு செய்வதில் கிரெடு முறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
கொடூரமான கொரோனா வைரசிலிருந்து மாணவர்களை காப்பாற்றும் பொருட்டு மாணவர்களின் நலனைருதி 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி வழங்கிய மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டி மகிழ்கின்றோம். தேர்வு மதிப்பெண் கணக்கீடுசெய்வதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடியாய் பாதிப்பு ஏற்படுகிறது.காலாண்டு அரையாண்டு த் தேர்வுகளை  மிக மிகதுள்ளியமாக மதிப்பீடுசெய்தே மதிப்பெண் வழங்குவது வழக்கம்.மாணவர்க ள் மென்மேலும் முயற்சிக்க தூண்டும் வகையில் ஆயத்தப்படுத்துவோம் காலமாகவே காலாண்டுத் தேர்வு அமையும். படிப்படியாக முன்னேறி அதன்பிறகு  மூன்றுதிருப்புத் தேர்வுகளையும் சிறப்பாக எழுதி அதுவும் அரசுத்தேர்வுபோலவே நடத்தப்பட்டு மதிப்பீடுசெய்ததில் அனைத்துமாணவர்களுமே தேர்ச்சி மட்டுமல்ல அதிகமதிப்பெண்  பெறுவார்கள்..ஆனால்  தற்போதைய  முடிவு அந்த மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.எனவே  அரையாண்டு மற்றும் மூன்று திருப்புதல் தேர்வுகளையும் சேர்த்து அதிக மதிப்பெண் பெற்ற இரண்டினை கணக்கீடுசெய்யவேண்டுகிறோம்..மேலும் வருகைப்பதிவு 20 விழுக்காடு அனைத்து மாணவர்களுக்குமே வழங்கிட. ஆவனசெய்யவேண்டும்.நன்கு படிக்கும் மாணவன் கூட. குடும்பச்சூழல் , நோய் தொற்று ஆகியவற்றில் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்திருந்தால் அம்மாணவனின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. அனைவருக்கும் 20 விழுக்காடு மதிப்பெண் வழங்கவேண்டும்.
   மேலும்,  அரசுபள்ளிகளில் EMIS மூலமாக அனைத்து பதிவுகளும் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண்கள் முறை மூலம் எப்படி மதிப்பெண் வரும் என்று மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.ஆகையால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது மனஉளைச்சல் ஏற்படாமல் இருக்க மதிப்பீடு முறையினை (GRADE SYSTEM)  கடைபிடிக்க ஆவனசெய்தும் தேர்வு முடிவுகள் குறித்து தெளிவான நெறிமுறைகள் வழங்கி உதவிட ஆவனசெய்யும்படி மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை   செயலாளர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment