கொரோனா பரவல் அச்சம்
+2 விடைத்தாள் மையங்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்துதர தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
27.05.2020 அன்று தொடங்கப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மிகுந்த பாதுகாப்பு வசதியுடன் நடக்கும் என்று மாண்புமிகுபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால் ஒரு மையத்திற்கு சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் 150 ஆசிரியர்கள் என்று அறிவித்துவிட்டு 500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 சேர்த்து 560 பேர் மற்றும் 300 என்று மையங்களுக்கு ஏற்ப. விடைத்தாள் திருத்தும்பணி மேற்கொண்டுவருகிறார்கள். இதனால் சமூக இடைவெளி இல்லாததால் கொரோனா தொற்று தொற்றிவிடுமோ என்ற அச்சத்திலே பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது.மேலும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறைது.விடைத்தாள் விநியோகிப்போர் விடைத்தாள் திருத்துவோர், மேற்பார்வையாளர் என பலபேருக்கு விடைத்தாள்கள் கைமாறுவதால் ஒருவருக்கு தொற்று இருந்தாலும் மையமே பாதிப்பிற்குள்ளாகும் சூழல் ஏற்படும். ஆகையால் கையுறை வழங்குவதுடன் தினந்தோறும் முகககவசமும் வழங்கவேண்டும். மையத்திற்கு 150. ஆசிரியர்கள் விதத்தில் விடைத்தாள் திருத்தும் மையங்களாக மாற்றியும் பேருந்து கட்டணத்தை உரிய கட்டணம் மட்டும் வசுலிக்கவும் ஆசிரியர்-அலுவலர் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஆவன செய்யும்படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
No comments:
Post a Comment