Pages

Pages

Wednesday, May 13, 2020

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணையம் வழியாக மாநில நிருவாகிகள் கூட்டம் இன்று 13-05-2020 மாலை 4 மணியளவில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் தொடங்கியது. பொதுச்செயலாளர் அ.அர்ஜுணன் வரவேற்புரையுடன் பொருளாளர் ஜி.சாந்தி முன்னிலையில் நடந்தது.இக்கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட. நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன





தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணையம் வழியாக மாநில நிருவாகிகள் கூட்டம் இன்று 13-05-2020 மாலை 4 மணியளவில் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் தொடங்கியது. பொதுச்செயலாளர் அ.அர்ஜுணன் வரவேற்புரையுடன் பொருளாளர் ஜி.சாந்தி முன்னிலையில் நடந்தது.இக்கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட. நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. ஆசிரியர்களுக்கு இணையம் வழியாக பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

2. தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துதல்

3. கொரோனா கட்டுபாட்டிற்குள் வரும்வரை மாணவர்களின் நலன்கருதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை தள்ளிவைக்க அரசினை தொடர்ந்து வலியுறுத்துதல்

4.கொரோனா பரவல்  ஊரடங்கு காரணத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் உதவிகள் வழங்கிவருவதற்கு மாநில அமைப்பு சார்பில் பாராட்டுச்சான்றிதழ் வழங்கியதற்கு நன்றி

5. பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியின்போது ஆசிரியர்களுக்கு முழு பாதுகாப்பு கவசம் வழங்கியும் சமூகஇடைவெளி கடைபிடிக்கும் வகையில் அதிகளவில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தருதல்

6. முதலமைச்சர் நிவாரணநிதிக்கு ஆசிரியர்கள் ஏற்கனவே ஒரு நாள் ஊதியம் வழங்கியிருந்தும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மூலம் உறுப்பினர்களிடம் நிதி திரட்டி வழங்குதல். 

 ஆகிய. 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக தகவல் தொழில்நுட்பத்தினை சரியானமுறையில் பயன்படுத்தி சங்கம் வளர்ச்சிக்கு உதவிவரும் திரு.கே.ரமேஷ் மற்றும் சி. ஸ்ரீதர் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 
98845 86716

No comments:

Post a Comment