அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்தவர்களும், பெரும்பாலும் தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்களை சார்ந்தவர்களே அரசு,மாநகராட்சி பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். இம்மாணவார்களை திடிரென்று இணையம் வழியாக பாடம் நடத்தப்படும் Zoom செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்றதால் மாணவர்களும்,பெற்றோர்களும் அவர்களின் இயலாமையை நினைத்து குழம்பி அதுவும் வாழ்வாதாரம் இழந்து ஊரடங்கு காலத்தில் மாணவர்களை வலியுறுத்தியதால் smart phone வசதியில்லார் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். இதனால் இருப்பவர் பயன்பெறுவர் இல்லாதவர் பாதிப்படைவர். சமவாய்ப்பு சமூகநீதி பாதிக்கப்படும் என்பதை அரசிடம் வலியுறுத்தியதின்பேரில் மாணவர்களின் கல்வி நலன்கருதி இன்று முதல்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை மூலம் இயங்கும் 70 உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் படித்துவரும் இந்த கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு படித்து அடுத்த கல்வியாண்டில் (2020-2021)10 ஆம் வகுப்பு படிக்கபோகும் மாணவர்களுக்கு M I smart phone வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம். கைப்பேசியினை இலவசமாக வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி கல்வி கற்கும்போது அரசுபள்ளி மாணவர்களுக்கு தன்னாம்பிக்கையினை ஏற்படுத்தும். எதிர்வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கைப்பேசி வழங்கி அவர்களும் சாதிப்பதற்கு தூண்டுகோளாக அமையும்.கைப்பேசி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் முதல்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிருவாகத்திற்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், தற்போது 75 % மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை 100 % வழங்கவும் கல்வியாண்டு தொடக்கத்திற்குள் மாநிலம் முழுவதும் விரைந்து விரிவுபடுத்திட ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
9884586716
No comments:
Post a Comment